(எம்.மனோசித்ரா)
வர்த்தகர்கள் திடீரென விலைகளை அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு, பாணுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துமாறு எடை மற்றும் அளவுகளை பரிசோதிக்கும் பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
கோதுமை மாவின் விலை மற்றும் உற்பத்தி செலவுகள் என்பவற்றைக் கருத்திக் கொண்டு குறித்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று அந்த சங்கத்தின் பேச்சாளர் துலித் அஷோக தெரிவித்துள்ளார். இது தவிர மேலும் பல யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை காலத்திற்கு ஏற்றது என்றும் , பாண் கட்டளை சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடுவதற்கு தான் தயாராக உள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM