குவைத் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருட சிறை

By Digital Desk 5

28 Oct, 2022 | 05:14 PM
image

குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

லஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குவைத் மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிபதிகளுக்கு இத்தண்டனைகளை விதித்துள்ளது.

நீதிபதிகள் 7 பேருக்கு 7 முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நீதிபதிகள் இருவரை பணியிலிருந்து நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

மற்றொரு நீதிபதி நிராபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிபதி ஒருவர் லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் இரு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கும் குவைத் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊழியர்கள், வர்த்தகர்கள் பலருக்கும் இவ்வழக்கில் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர்கள் சிலரை பதவி நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக, ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குவைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் குவைத்தின் 6 நீதிபதிகளுக்கு லஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் 5 முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17