உலகில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மேத்யூ டம்பெரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவும், நிலவின் ஈர்ப்பு சக்தியும் பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பருவநிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்காக, இலட்சக்கணக்கான கோடிகளை செலவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.