மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு

Published By: Digital Desk 5

28 Oct, 2022 | 02:47 PM
image

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம்  மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறுகிய நலன்களையும், தேர்தல் அரியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,

அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த  மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும்  முன்வரவேண்டும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள  மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17