பிரான்ஸில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோண்ட்பெல்லியீர் பகுதியில் அமைந்துள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான்.

இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இல்லத்தின் மற்ற தளங்களில் நுழைந்து 16 பேரை மீட்டுள்ளனர். பின்னர், பாதுகாப்பாக 59 பேரையும் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு பணிப்பெண் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த மர்ம நபரின் நோக்கம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. மேலும், அவன் கட்டிடத்தை விட்ட தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது, மர்ம நபருக்கும் தீவிரவாத குழுவுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.