யால தேசிய பூங்காவிற்குள் வாகனங்களை கண்மூடித்தனமாக செலுத்தி விலங்குகளிற்கு ஆபத்தை ஏற்படுத்திய குழுவினரில் தனது மகனும் காணப்பட்டதாக வெளியான செய்திகளை அமைச்சர் மகிந்த அமரவீர நிராகரித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களாக எனது மகன் கொழும்பிலிருந்து வெளியே செல்லவில்லை மத்துகமவில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாத்திரம் சென்றார் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்களின் படி குறிப்பிட்ட நபர்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக வேக கட்டுப்பாடுகளை மீறி அதிவேகத்தில் வாகனங்களை செலுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு இது குறித்த வீடியோக்கள் கிடைத்தவேளை நான் வெளிநாட்டிலிருந்தேன் நான் பொலிஸ்மா அதிபருடன் பேசினேன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக அவர்களுடைய சமூக அந்தஸ்த்தை கருத்தில் எடுக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் அமைச்சின் செயலாளருடன் பேசி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்துள்ள அமைச்சர் பின்னர் நான் எனது மகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன் அவர் தனது தனிப்பட்ட வாகனச்சாரதியுடன் வெளியே சென்றிருப்பதை உறுதி செய்தேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் கடந்த பத்து நாட்களாக கொழும்பிலிருந்து வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதை உறுதி செய்தேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இதில் தொடர்பில்லை என்பதையும் உறுதி செய்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM