பாசிப்பருப்பு சுண்டல்

Published By: Digital Desk 7

28 Oct, 2022 | 10:06 AM
image

தேவையான பொருட்கள் 

பாசிப்பருப்பு - 1 கப் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

உப்பு - தேவைகேற்ப 

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் 

பொடி செய்ய: 

தனியா- 1 கைப்பிடி 

பச்சை மிளகாய் - 1 

இஞ்சி - சிறிய துண்டு 

தாளிக்க: 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

கடுகு – 1/2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு 

காய்ந்த மிளகாய் - 2 

செய்முறை 

பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும். பொடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, வேகவைத்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கிளறவும். 

கடைசியாக, பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்