இலங்கையின் பவர் வேர்ள்ட் ஜிம், இந்தியாவின் Talwalkars உடன் இணைந்து, இந்தியாவின் பெங்களூர் நகரில் 20 ஜிம்களை அறிமுகம் செய்துள்ளது. இரு நாடுகளிலும் துறைசார்ந்த அனுபவத்தைப்பெற்ற உடல் கட்டமைப்பு நிறுவனங்களாக இவை இரண்டும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னணி ஜிம் தொடரான பவர் வேர்ள்ட் ஜிம்ஸ், இரு தசாப்த காலப்பகுதிக்கு அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளது. தரம் வாய்ந்த உடற்பயிற்சி நிலையங்களை சகாயமான விலையில் மத்திய மற்றும் உயர் வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக வழங்கி வருகிறது. இந்தியாவின் பங்க@ர் நகரில் உடற்பயிற்சி துறையில் பிரவேசித்துள்ளமையானது, பவர் வேர்ள்ட் ஜிம் இந்தியா உபகண்டத்தில் கொண்டுள்ள அதன் பிரசன்னத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது.
பவர் வேர்ள்ட் ஜிம்ஸ் ஸ்தாபகர் தலவு அலய்லிமா இந்த புதிய நிலையங்கள் திறந்த வைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பவர் வேர்ள்ட் ஜிம்ஸ் மாதிரி வளர்ச்சி கண்டுள்ளது. முறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 17 நிலையங்களைக் கொண்ட வலையமைப்பை உருவாக்கி அதனூடாக 16000 க்கும் அதிகமான அங்கத்தவர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. Talwalkars உடனான எமது பங்காண்மை என்பது, இந்தியாவுக்கும் எமது பவர் வேர்ள்ட் ஜிம்ஸ் மாதிரியை விஸ்தரிப்பதற்கு உதவியாக அமைந்திருந்தது. இது உண்மையில், பெருமளவு வசதி வாய்ப்புகள் இல்லாத சமூகத்தில் சகாயமான ஜிம் வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எதிர்பார்க்கும் இளம் நிபுணர்களுக்கு பெங்க@ர் சகாயமான வசதிகளை கொண்டுள்ளது. இந்தியாவில் நாம் முதலாவதாக அறிமுகம் செய்யும் நகராக பெங்க@ரை தெரிவு செய்துள்ளோம்” என்றார்.
Talwalkars Better Value Fitness லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் பிரஷாந்த் தல்வால்கர் கருத்துத் தெரிவிக்கையில், “சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி சந்தையில் மாறிவரும் வளர்ச்சியை பெங்க@ர் கொண்டுள்ளது. பெருமளவு வருமானமீட்டுவோர் இந்தப்பகுதியில் காணப்படுவதுடன், அவர்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. Talwalkars எப்போதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய உடற்பயிற்சி தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறது. எனவே, எமது இலங்கை பங்காளர்களுடன், ஒரே நாளில் 20 பவர் வேர்ள்ட் ஜிம்களை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
2015 ஒக்டோபர் மாதம், Talwalkars Better Value Fitness லிமிட்டெட் நிறுவனம், பவர் வேர்ள்ட் ஜிம்ஸில் கொள்கை அடிப்படையிலான முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. இந்தியாவுக்கு அப்பால் நாடொன்றில் மேற்கொள்ளப்பட்ட கன்னி முதலீடாக இது அமைந்திருந்தது. 84 நகரங்களில் 176க்கும் அதிகமான ஜிம்களை Talwalkars கொண்டுள்ளது. இதனூடாக ஜிம்கள், ஸ்பாக்கள், ஏரோபிக்ஸ்கள் மற்றும் சுகாதார பரிசோதனை நிலையங்கள் போன்ற பரந்தளவு சேவைகள் வழங்கப்படுகின்றன. இவை ‘Talwalkars ’ அனைத்தும் எனும் வர்த்தக நாமத்தின் கீழ் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் 166000 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். இந்தியாவின் உடற்பயிற்சி துறையில் 1932ம் ஆண்டு முதல் முன்னோடியாக திகழ்வதற்கு மேலதிகமாக, பம்பாய் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட முதலாவது உடற்பயிற்சி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டுக்கான சிறந்த ஒரு பில்லியனுக்கு குறைந்த நிறுவனம் என ஃபோர்ப்ஸ் ஏசியாவினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. 2015ல் Talwalkars மொத்தமாக 2015ல் 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பதிவு செய்திருந்தது. சந்தை மூலதனவாக்க பெறுமதியாக 83.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டுள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்தளவு ஜிம்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதற்கு, சகாயத்தன்மை மற்றும் காணப்படும் தூரம் போன்றன காரணங்களாக அமைந்திருந்தன. த பவர் வேர்ள்ட் - Talwalkars பங்காண்மை என்பது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளதுடன், வேகமாக இந்தியாவில் வளர்ந்து வரும் உடற்பயிற்சி தகைமையை தீர்த்து வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM