ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் 3வது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று 2வது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

மேற்குறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் 108 பேர் ரயல்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, அபராத தொகையாக 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

குறித்த அபராத தொகையை செலுத்த மறுத்த 10 பேர் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.