(எம்.ஆர்.எம். வசீம்)
உலகளாவிய அரசியலின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்ற போதிலும், காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமை, சுதந்திரம் ஆகியவை வழங்கப்படும் வரை காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் எப்போதும் அவர்களுக்கு துணையாக இருக்கும் என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி தெரிவித்தார்.
காஷ்மீர் கறுப்பு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (ஒக் 27) பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்திய நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல தசாப்தங்களாக இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
காஷ்மீர் மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைக்கு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவினை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானும் அதன் மக்களும் காஷ்மீர் சகோதர, சகோதரிகளுடன் மனதளவில் ஒன்றுபட்டுள்ளனர். காஷ்மீர் மக்களின் அபிலாசைகளின் படியும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு ஏற்பவும் காஷ்மீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம்.
உலகளாவிய அரசியலின் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமை, சுதந்திரம் ஆகியவை வழங்கப்படும் வரை காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM