வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

Published By: Nanthini

27 Oct, 2022 | 05:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரி அதிகரிப்பு சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஒருசில தீர்மானங்கள் தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேற்றமடைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் வியாழக்கிழமை (ஒக் 27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தான் நாடு அபிவிருத்தியடைந்தது. 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரையான காலப்பகுதியில் நாடு பல துறைகளில் அபிவிருத்தியடைந்தது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின், கிராமபுறங்கள் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதற்காக கிராம புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன.

நடுத்தர மக்கள் தொழில்துறையில் முன்னேற்றமடைந்தார்கள். 2015ஆம் ஆண்டு நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். 

நல்லாட்சி அரசாங்கத்தில் நாடு அபிவிருத்தி அடையவில்லை. ராஜபக்ஷர்களை பழிவாங்கும் நோக்கில் எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டன.

2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றது. தேசிய தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் அவர் வரிச் சலுகை வழங்கினார்.

வரிச் சலுகை வழங்கப்பட்டதால், அரச வருவாய் இழக்கப்பட்டது என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள். அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வரியை அதிகரிக்கும் போது எதிர்க்கட்சியினர் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

வரி அதிகரிப்பால் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

அச்சுறுத்தல்களால் எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. தவறுகளை திருத்திக்கொண்டு சவால்களை வெற்றி கொள்வோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41