1.8 பில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கும் சீனா

Published By: Digital Desk 3

27 Oct, 2022 | 04:42 PM
image

(எம்.மனோசித்ரா)

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் இரு விமானங்கள் ஊடாக இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தன. 

சீனா நன்கொடையாக வழங்கியுள்ள இந்த மருந்துகளின் பெருமதி 1.8 பில்லியன் ரூபாய் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சீனா 1.2 பில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று  நாட்டை வந்தடைந்தவற்றில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பலவும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , 12, 500 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல், நாட்டை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் சீனாவிலிருந்து வருகை தந்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது. 

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் குறித்த உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36