அவுஸ்திரேலிய அணியில் ஸம்ப்பாவைத் தொடர்ந்து வேடுக்கும் கொவிட்

Published By: Nanthini

27 Oct, 2022 | 05:30 PM
image

(என்.வீ.ஏ.)

ங்கிலாந்துக்கு எதிராக ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (ஒக் 28) நடைபெறவுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணியில் இரண்டாவது வீரருக்கு கொவிட் அறிகுறி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரம வைரிகளான இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் மூத்த விக்கெட் காப்பாளர் மெத்யூ வேடுக்கு கொவிட் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு இலேசான அறிகுறிகளே இருப்பதால் இங்கிலாந்துடனான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது சக அணி வீரர் சுழல்பந்து வீச்சாளரான அடம் ஸம்ப்பாவும் இந்த வார ஆரம்பத்தில் சிறிதளவு கொவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

எனினும், இங்கிலாந்துடனான போட்டியில் அடம் ஸம்ப்பா விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

வேடுக்கு தொடர்ந்தும் சிறிய அளவிலான கொவிட் அறிகுறி இருந்தால், அவரும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய அணியில் பதில் விக்கெட் காப்பாளர் ஒருவர் இல்லாததால் க்லென் மெக்ஸ்வெல் விக்கெட்காப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41