(எம்.எம். சில்வெஸ்டர்)
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி.யின் 8ஆவது உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது சதத்தை தென் ஆபிரிக்காவின் ரில்லி ரூசோ அடித்து அசத்தினார்.
மேலும், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் பதிவான 10ஆவது சதமும் இதுவாகும்.
இதற்கு முன்னர், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் (117 & 100) இரண்டு சதங்களும், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101), இலங்கையின் மஹல ஜயவர்தன (100), நியூஸிலாந்தின் பிரெண்டன் மெக்கலம் (123), இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (116), பாகிஸ்தானின் அஹமட் ஷேஷாட் (111), பங்களாதேஷின் தமீம் இக்பால் (103), இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (101) ஆகியோர் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் குவித்த வீரர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இப்போட்டித் தொடரின் 22ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை தென் ஆபிரிக்கா அணி எதிர்கொண்டது. சிட்னியில் இன்று (ஒக் 27) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 205 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் ரில்லி ரூசோ 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களை விளாசினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்கவே, தென் ஆபிரிக்க அணி 104 ஓட்டங்களால் இமாலய வெற்றியை ஈட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM