சீனாவின் முதலீடு தாமதமானது தலிபான்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது

Published By: Rajeeban

27 Oct, 2022 | 03:34 PM
image

https://afghandiaspora.net/

உலக நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியுள்ள சூழலில் வெளிநாட்டு உதவி எதுவும் இல்லாததால் ஆப்கானின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சீனாவின் முதலீடுகளும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

ஆப்கானில் முதலீடு செய்வது குறித்து சீனா பின்பற்றும் மெதுவான நடவடிக்கை

(அறிவிக்கப்படாத ) தலிபான் அதிகாரிகளையும் வர்த்தகர்களையும் சீற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஆப்கானில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை அந்த நாடு மோசமான பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ளது.

அமெரிக்கா வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை பொருளாதார ரீதியில் நிரப்புவதாக சீனா வாக்குறுதியளித்த போதிலும் பொருளாதார நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை.

பல சீன நிறுவனங்கள் ஆப்கானிற்கு விஜயம் மேற்கொண்டு ஆப்கானின் வர்த்தக சம்மேளனம் உட்பட வர்த்தக சம்மேளனத்தினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் ஆனால் முதலீடுகள் விடயத்தில் எதுவும் இடம்பெறவில்லை.

இடைநிறுத்தப்பட்டுள்ள கூட்டுமுதலீடுகளை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலமும் புதிய முதலீடுகள் மூலமும் காபுலிற்கு உதவ தயார் என சீனா தெரிவித்திருந்தது ஆனால் அது வெறுமனே வாக்குறுதியாக மாத்திரம் காணப்படுகின்றது.

மத்திய ஆசிய நாடுகள் ஊடாக ஆப்கானை சீனாவுடன் இணைக்கும் புகையிரதப்பாதையை சீனா உருவாக்கியுள்ளது – செப்டம்பர் 13ம் திகதி முதலாவது கொள்கலன்கள் சீனாவை நோக்கி புறப்பட்டிருந்தன.

இந்த முயற்சி ஆப்கானின் தலிபான் அரசாங்கத்திற்கான பொருளாதார பாதைகளை திறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் பொருட்களிறகு 98 வீத வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நடவடிக்கைகள் ஆப்கானிற்கு எந்த நன்மையையும் கொண்டுவரப்போவதில்லை.

ஆப்கான் என்பது அதன் கனிமவள ஏற்றுமதியை நம்பியுள்ளதுஎனினும் அதன் ஏற்றுமதிகள் கைத்தொழில்மயமாக்கலிற்கு உதவுவதற்கு போதுமானவையல்ல.

கடந்த ஒரு தசாப்தகாலமாக சீனா ஆப்கானுடான ஈடுபாட்டை அதிகரித்து வந்துள்ளது.

ஆப்கான் மத்திய ஆசியாவை மத்திய கிழக்குடன் இணைக்கும் முக்கிய பாதையில் உள்ளதால சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கு அது முக்கியமானது.

ஆப்கானில் ஸ்திரதன்மை மற்றும் அமைதி ஆகியன நிலவினால் மாத்திரமே சீனாவின் நீண்டகால நோக்கங்கள் நிறைவேறும் – ஆப்கானில் பொருளாதார அபிவிருத்தி காணப்படுவது மாத்திரமே இதற்கான ஒரே வழி.

காபுலை புவிசார் அரசியல் போட்டியிலிருந்து பாதுகாப்பது மேற்கின் செல்வாக்கிற்குள் அந்த நாடு சிக்குவதை தவிர்ப்பது அந்த நாட்டில்ஸ்திரதன்மையை ஏற்படுத்துவது தீவிரவாதிகளின் புகலிடமாக அந்த நாடு மாறாமல் தடுப்பது ஆகியனவே ஆப்கான் தொடர்பான சீனாவின் மூலோபாய நோக்கங்களாகும்.

சீனா தன்னுடைய சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்துடன் தொடர்புடைய தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தளமாக ஆப்கான் மாறக்கூடும் என அச்சம் கொண்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு டேர்க்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் குறித்து சீனா கவலை கொண்டுள்ளது.

பாக்கிஸ்தானிற்கும் தஜிக்கிஸ்தானிற்கும் இடையிலான 90 கிலோமீற்றர் வக்கா பாதை ஜின்ஜியாங்கிற்கு செல்வதற்கான வழியாக காணப்படுகின்றது. இதன் காரணமாக ஜின்ஜியாங்கில் கிழக்கு டேர்க்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் செல்வாக்கு அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது

.

ஜின்ஜியாங்கின் எல்லையிலிருந்து ஈடிஎம் தீவிரவாதிகளை அகற்றும் நடவடிக்கைகளை சீனாவை திருப்திப்படுத்துவதற்காக தலிபான் முன்னெடுத்துள்ளது.

ஈடிஎம் தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் அதன் உறுப்பினர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துகொள்வார்கள் என தலிபான் கருதுகின்றது.

தலிபானிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக ஐஎஸ் காணப்படுகின்றது.

ஈடிஎம் மாத்திரம் ஆப்கானிலிருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை

அல்ஹைதா டிடிபி போன்ற அமைப்புகளும் சீனாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ஐஎஸ்கேபி என்ற அமைப்பும் மேலும் குழப்பங்களை உருவாக்குகின்றது.

ஆப்கானை சீனாவிற்கு தலிபான் விற்றுவிட்டது என இந்த அமைப்பு குற்றம்சாட்டுகின்றதுஇஉய்குர் விவகாரத்தை எழுப்பும் ஐஎஸ்கேபி அமைப்பின் பிரச்சாரங்கள் குறித்து சீனா கவலையடைந்துள்ளது.

சர்வதேச அளவில் உட்கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொள்ளவும் தனக்கு நெருக்கமான நாடுகளின் வலையமைப்பை உருவாக்கவும் சீனா புதிய பட்டுப்பாதை திட்டத்தை பயன்படுத்துகின்றது.

புதிய பட்டுப்பாதை திட்டத்தில் ஆப்கானை இணைத்துக்கொள்வது குறித்து கருத்து தெரிவித்திருந்தசீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி ஈடிஐஎம் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் ஒடுக்குவது என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை தலிபான் எடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

.ஆனால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லீம் மக்களைக் கொண்ட ஜின்ஜியாங்கில் பாதுகாப்பின்மை பரவக்கூடும் என்ற கவலையின் காரணமாக சீனா ஆப்கானிஸ்தானை நோக்கி எச்சரிக்கையாக உள்ளது. பெய்ஜிங் தலிபான் அரசாங்கத்தை கையாள்வதில் ஒரு அளவு எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு எந்த பொருளாதார உதவியும் வழங்குவதைத் தவிர்த்தது. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்து வருவதால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீன முதலீடு நிறுத்தப்படலாம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04