ஹொங்கொங்கில் சிறுவர்களை தண்டிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் கவலை

Published By: Rajeeban

27 Oct, 2022 | 11:47 AM
image

ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நான்கு சிறுவர்கள் உட்பட ஐவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் விசேட நிர்வாக பகுதியான ஹொங்கொங்கில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் ரவினா சம்சடானி தெரிவித்தார்.

சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்ட ஐந்து பதின்ம வயதினருக்குமக்கள்  எழுச்சிக்கான வேண்டுகோள்கள் மூலம் சதிமுயற்சியை தூண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என ஹொங்கொங் பிரீ பிரஸ் தெரிவித்துள்ளது.

ஐவரும் அரசியல் குழுவொன்றை சேர்ந்தவர்கள் .

இவர்களை பயிற்சி நிலையமொன்றிற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது( 21 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான தண்டனை)

ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்தின் மீது ஏற்படுத்துகின்ற எதிர்மறையான தாக்கம் குறித்து மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் தொடர்ச்சியாக கரிசனைகளை வெளியிட்டு வந்துள்ளன.

சர்வதேச சட்டங்களின் கீழ் ஹொங்கொங் அதிகாரிகளிற்கு உள்ள சர்வதேச கடப்பாடுகளை நினைவுபடுத்தியுள்ள ஐநா அமைப்பு குறிப்பாக ஐசிசிபிஆர் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான சாசனம் குறித்து நினைவுபடுத்தியுள்ளது.

சிறுவர்களை கைதுசெய்வது அல்லது தடுத்துவைப்பது சட்டத்திற்கு ஏற்ப காணப்படவேண்டும் அதனை இறுதிவழிமுறையாக மாத்திரம் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தலாம் என சிறுவர் உரிமை தொடர்பான சாசனத்தின் 37 பிரிவு தெரிவிக்கின்றது.

ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் 2022 ஜூன் 30 திகதி நடைமுறைக்கு வந்தது.இந்த சட்டம் பிரிவினைவாதம், அமைப்பு முறைக்கு ,எதிரான நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்தல் போன்றவற்றை குற்றங்களாக குறிப்பிட்டுள்ளதுடன் இவற்றிற்கு ஆகக்கூடிய தண்டனையை ஆயுள் தண்டனையை விதிக்கலாம் என தெரிவிக்கின்றது.

ஹொங்கொங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிற்கு இந்த சட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளும் இதற்குள் அடங்குகின்றன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித...

2024-09-07 13:44:57
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க...

2024-09-07 09:48:04
news-image

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி...

2024-09-07 09:27:53
news-image

கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ;...

2024-09-06 13:37:54
news-image

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி...

2024-09-06 10:26:35
news-image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக...

2024-09-05 16:25:51
news-image

ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை...

2024-09-05 17:00:20
news-image

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம்...

2024-09-05 11:02:38
news-image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு...

2024-09-05 06:26:56
news-image

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய...

2024-09-04 16:33:57
news-image

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு...

2024-09-04 12:19:41
news-image

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி...

2024-09-04 10:31:05