தனித்துவமான சுவை, தனித்துவமான மசாலாக்கள், தனித்துவமான சமையல் நுட்பங்கள் என இலங்கை சமையல் அடையாளத்தின் முக்கிய அங்கமாக திகழ்கின்றன யாழ் உணவுகள்.
கொழும்பு ரமடா கடந்த இரண்டு தசாப்த காலமாக யாழ்ப்பாணத்தின் சமையற்கலை நிபுணர்களின் கை பக்குவத்தோடு வடக்கின் சுவைகளை யாழ் விருந்து , யாழ்ப்பாண உணவுத் திருவிழாவாக தலைநகரில் கொண்டாடி வருகின்றது.
2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாண உணவுத் திருவிழாவை அறிமுகப்படுத்திய கொழும்பின் முதன்மை ஹோட்டல்களில் ஒன்றாக திகழும் ரமடா யாழ்ப்பாண உணவின் சுவைகளை கொழும்பு நகரில் அறிமுகப்படுத்தி தலைநகரில் தனக்கென்றவொரு அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ளது.
எதிர்வரும் 2022 ஒக்டோபர் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் My Sister's Kitchen இலிருந்து துஷாரா மற்றும் தனு இன்னாசித்தம்பியுடன் இணைந்து இவ்வருடமும் யாழ் விருந்து யாழ்ப்பாண உணவுத் திருவிழாவை பிரம்மாண்டமாய் கொண்டாட காத்திருக்கிறது ரமடா.
பிரபலமான ஒடியல் கூல், வாழைக்காய் வறுவல், ஆட்டெலும்பு சூப், லகூன் நண்டு கறி, சிறப்பு கடல் உணவுகள், வட நாட்டு இனிப்பு வகைகள் போன்றவற்றுடன் நெல்லி மற்றும் பனங்கருப்பட்டி ஐஸ்க்றீம் இணைந்து இன்னும் பல சைவ மற்றும் அசைவ யாழ் உணவு வகைகள் பரவலாக இடம்பெறும்.
இந்த சுவையான இரவு உணவு புஃபே இரவு 7 மணி முதல் 11 மணி வரை ரமடாஸ் கார்டேனியா உணவகத்தின் குளக்கரையருகில் வசீகரிக்கும் அலங்காரம், பாரம்பரியமாய் அலங்கரிக்கப்பட்ட நுழைவு மற்றும் வடக்கின் காலத்தால் அழியாத பாடல்களுடன் யாழ் விருந்து பிரம்மாண்டமாய் அரங்கேறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM