உரிய நேரத்தில் தேர்தல் இடம்பெறும் : தேர்தலை பிற்போடும் தேவை ஜனாதிபதிக்கு இல்லை - ஐ.தே.க.

Published By: Nanthini

26 Oct, 2022 | 05:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தல்களை பிற்போடுவதற்கு ஜனாதிபதிக்கு எந்த தேவையும் இல்லை. உரிய காலத்துக்கு உரிய தேர்தல் இடம்பெறும். என்றாலும், தேர்தலுக்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியிருக்கின்றது.

அதற்கான நடவடிக்கைகளுக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் நடத்துவதை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல் வரைபை சுருட்டிக்கொள்வதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை. ஆனால், மக்களின் பட்டினியை போக்கி, நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவராமல்,  தேர்தல் நடத்துவதற்கு பில்லியன் கணக்கில் செலவிட தற்போதுள்ள நிலையில் முடியாது என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

அதனால் உரிய காலத்துக்கு உரிய தேர்தல் இடம்பெறும். என்றாலும், அதற்கு முன்னர் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அதேபோன்று 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிகமான வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

நாட்டை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கான அங்கீகாரமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். 

அத்துடன் 21ஆம் திருத்தத்தில் இருக்கும் ஆணைக்குழுக்களின் நிறுவுனர் ரணில் விக்ரமசிங்கவாகும். 

ஆணைக்குழு அமைக்கும் யோசனையை அவர் 2001இலும் கொண்டுவந்திருந்தார். அதேபோன்று 2004 மற்றும் 2015இலும் கொண்டுவந்திருந்தார். ஆணைக்குழுக்கள் சுயாதீனப்படுப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து தெரிவித்து வந்ததாகும்.

அத்துடன், இரட்டை பிரஜாவுரிமைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனெனில், இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் தான் செய்யும் நடவடிக்கையில் இருந்து விடுபட்டு, வேறு நாடொன்றுக்கு சென்று குடியேறலாம்.

அதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய அரசியல் தலைவராக நியமிக்கப்படுவதற்கு, இரட்டை பிரஜாவுரிமையில் இருந்து நீங்கி, மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவாரக இருக்கவேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16