(எம்.எப்.எம்.பஸீர்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவுடன் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்ப்ட்டுள்ளமை கண்டறியப்ப்ட்டுள்ளது.
கடும் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கல்வெவ சிறிதம்ம தேரர் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு முன்னெடுக்கப்ப்ட்ட பரிசோதனைகளின் போது டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்ப்ட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு குறித்த தேரர் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கடுமையான காய்ச்சல் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேசிய வைத்தியசாலையின் 49 ஆவது சிகிச்சை அறையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
நாட்டில் ஜனாதிபதி பதவி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களாக விளங்கிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் விசாரணையின் இடையே ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க 50 நாள் தடுப்புக் காவலின் பின்னர் சான்றுகள் எனக் கூறி விடுவிக்கப்பட்டார்.
எனினும் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் 65 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM