ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்ய வேண்டாம் - அகிலவிராஜ் வேண்டுகோள்

Published By: Nanthini

26 Oct, 2022 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுமானால் நாட்டை முன்னேற்றிச் செல்லும் வேலைத்திட்டங்கள் தடைப்படும் அபாயம் இருக்கின்றது.

அதனால் மக்கள் கடந்த கால நிலைமைகளை உணர்ந்து, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியின் பலனாக தற்போது நாடு படிப்படியாக சுமுக நிலைக்கு திரும்பி வருகின்றது. 

மக்கள் எதிர்கொண்டுவந்த எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், அதன் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றது. 

எரிபொருட்களின் விலை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதுடன், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி மேலும் விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டை முன்னேற்றும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தால் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்டுவந்த நெருக்கடியான நிலைமை தற்போது குறைந்துள்ளது. 

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும், போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படாமல் இருக்கின்றது. இது தொடர்பாக பயணிகள் போக்குவரத்து சேவை சங்கங்களுடன் கலந்துரையாடி போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க இருக்கின்றார்.

மேலும் நாட்டுக்கு அதிக வருமானம் சுற்றுலாத்துறை ஊடாகவே கிடைக்கப்பெற்று வருகின்றது. 

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், சுற்றுலா பயணிகளின் வருகை 50 வீதம் வரை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிக்க பொருத்தமான நாடுகளின் வரிசையில் இலங்கை 12ஆவது இடத்தில் இருக்கின்றது. 

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை நாட்டில் இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத ஒரு நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

மக்களுக்கு வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச்செலவு அதிகரித்திருந்தது. என்றாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நிலைமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இவ்வாறான நிலைமையில் நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தால், சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்படும்.

அதனால் படிப்படியாக முன்னேற்றமடைந்து வரும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன், நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டங்களும் பாதிக்கப்படும். 

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மக்களுக்கே அதன் சுமை அதிகரிக்கும். 

கடந்த காலங்களில் மக்கள் வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாமல்போன நிலைமைகளை உணர்ந்து, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையில் பலத்த மழை, வெள்ளத்தால் வயல்...

2025-01-16 11:56:51
news-image

நாரிகம கடலில் மூழ்கிய மூன்று வெளிநாட்டுப்...

2025-01-16 11:58:05
news-image

கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர்...

2025-01-16 11:49:13
news-image

காத்தான்குடியில் பூட்டப்பட்ட வீட்டில் பொது சுகாதார...

2025-01-16 11:55:50
news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு...

2025-01-16 11:53:48
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04