இயற்கையின் தயவால் இங்கிலாந்தை வெற்றிகொண்டது அயர்லாந்து 

26 Oct, 2022 | 02:44 PM
image

(நெவில் அன்தனி)

முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இயற்கை அன்னையின் தயவால்  அயர்லாந்து அதிர்ஷ்டகரமான வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் சாரலுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. போட்டி இரண்டாவது தடவையாக மழையினால் தடைப்பட்டதால் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்து 5 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.   எனவே, அயர்லாந்து 5 ஓட்டங்களால் அதிர்ஷ்டவசமாக வெற்றிபெற்றது.

ஒருவேளை கெரத் டிலேனி வீசிய 15ஆவது ஓவர் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் போட்டி முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும். ஏனெனில் அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் மொயீன் அலி 12 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 82 ஓட்டங்கள் அயர்லாந்து அணி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற வழிவகுத்தது.

பெல்பேர்னி 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்க சிக்ஸ்கள் உட்பட  62 ஓட்டங்களைக் குவித்ததுடன் லோர்க்கன் டக்கர் 27 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட கேர்ட்டிஸ் கெம்ஃபர் 17 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க் வூட் 34 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

158 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட போட்டி முடிவு டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தீர்மானிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

முதல் ஓவரிலேயே அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்ததுடன் 3ஆவது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார்.

பென் ஸ்டோக்ஸ் 6 ஓட்டங்களுடன் 6ஆவது ஓவரில் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் நிலைமை மேலும் மோசம் அடைந்தது.

இதனை அடுத்து டேவிட் மாலன் (35), ஹெரி ப்றூக் (18) ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க கடும் பிரயத்தனம் எடுத்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தபோது ஹெரி ப்றூக் ஆட்டமிழந்ததுடன் மேலும் 19 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு 19 ஓட்டங்கள் சேர்ந்தபோது டேவிட் மாலன் வெளியேறினார்.

அடுத்து களம் நுழைந்த டக்வேர்த் லூயிஸ் முறைமை நினைவில் கொண்டு அதிரடியில் இறங்கிய மொயீன் அலி 12 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிடவே அவரது முயற்சி வீண்போனதுடன் அயர்லாந்துக்கு அதிர்ஷ்டகரமான வெற்றி கிடைத்தது.

அயர்லாந்து பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல்...

2023-02-02 10:31:01
news-image

55 வயதில் போர்த்துகல் கழகத்தில் விளையாட...

2023-02-02 10:04:53
news-image

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்...

2023-02-02 09:44:41
news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53