அரசியல் பழிவாங்கல்களுக்காக தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் அமுலிலுள்ளது - டிலான் பெரேரா

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 03:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் ஊடாக பிறிதொரு படலந்த சித்திரவதை முகாமை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை உயர்நீதிமன்றம் தோற்கடித்தமைக்கு நீதித்துறைக்கு மனமார்ந்த நன்றியையும்,கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் விடயங்களை பிறிதொரு வழிமுறை ஊடாக நிறைவேற்ற அரசாங்கம் எடுக்கும் முயற்சியை ஒன்றிணைந்து எதிர்ப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, சிறிதம்ம தேரருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து போராடுவோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மாத்திரம் அனுமதி உண்டு.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிதம்ம தேரரின் உடல் நிலை சீராக உள்ளது, அவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பயங்கரவாத விசாரணை பிரிவு கடந்த திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்தது, ஆனால் சிறிதம்ம தேரர் நேற்று முன்தினம் உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நிலை மோசமானதாக உள்ளது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு நிமித்தம் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படும் என சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில் அரசியல் பழிவாங்கலுக்கு தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது வெறுக்கத்தக்கதாகும்.

இவ்வாறான பின்னணியில் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் நிராகரிக்க முடியாது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது முரணானதா என்பதை ஆராயும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உண்டு.

சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகள் அரசியலமைப்பு முரண் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை இதுவரை அறிந்துள்ளோம், ஆனால் அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் ஊடாக பிறிதொரு பட்டலந்த சித்திரைவதை முகாமை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை உயர்நீதிமன்றம் தோற்கடித்துள்ளமை மதிக்கத்தக்கது. உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பிற்கு நன்றியையும்,கௌவரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உயர்நீதிமன்றத்தினால் அழுத்தமாக சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை மறைமுகமாக வழியில் பிறிதொரு சட்டமூலம் ஊடாக கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. பாராளுமன்றில் உள்ள சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து இதற்கு எதிராக போராடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51