தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது மிருகக்காட்சிசாலை இருக்கும் இடத்தில் குறித்த பூங்கா அமையவுள்ளதுடன் இது இரவு 9.30 மணிவரை மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும்.

இதேவேளை, எதிர்வரும் 2017 மார்ச் மாதத்துடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளுக்குள் அடைக்கப்படாத மிருகங்களை மாத்திரமே காணமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.