பம்பலப்பிட்டிய பகுதியில் நேற்று இரவு  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்தில் மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பாக பம்பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.