( ஆர்.வி.கே., ரி.விரூஷன் )

யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படங்களுடன்கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பல்கலைகழகத்திற்கு இன்று காலை வந்த மாணவர்களாலேயே குறித்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத் துண்டுப்பிரசுரங்களில் மாவீரர் நாள், தேசிய தலைவரது பிறந்தநாளிற்கு வாழ்த்துக்கள் போன்ற வசனங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பீடங்களின் நுழைவாயில்களிலும் ஒட்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

குறித்த துண்டுப்பிரசுரங்களை யார் ஒட்டியதென்பது இதுவரை தெரியாத போதும் துண்டுப்பிரசுரங்களில் பல்கலைகழக சமூகம் என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.