12 வருடங்களின் பின் மோதும் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் ! வெல்வது யார் ?

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 09:31 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குழு 1 சுப்பர் 12 சுற்றில் முதலாம் கட்டப் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நிகர ஓட்டவேக வித்தியாசம் பேச்சுப் பொருளாக அமைந்துள்ள நிலையில் இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப் போட்டி மெல்பர்னில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக் குழுவில் இடம்பெறும் அணிகளில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆப்பானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன.

அவற்றில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அணிகளைவிட மற்றெல்லா அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் நிகர  ஓட்டவேக   வித்தியாசமே அணிகளின் நிலையை நிர்ணயித்துள்ளது.

அணிகள் நிலையில் 2ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்து, கடைசி இடத்தில் இருக்கும் அயர்லாந்தை எதிர்த்தாடவுள்ளது.

நிகர  ஓட்டவேக   வித்தியாசத்தைவிட வெற்றியே முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இன்றைய போட்டியை இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒரே ஒரு தடவை இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2010இல் சந்தித்துகொண்ட போது அப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப்     பெற்றது.

12 வருடங்கள் கழித்து இரண்டு அணிகளும் மீண்டும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன.

இவ்வருடம் அதிசிறந்த துடுப்பாட்ட வரிசைகளைக் கொண்ட அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். எனினும் ஜொஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து இன்றைய போட்டியில் வெற்றியைக் குறிவைத்தே விளையாடவுள்ளது. அகுறைந்த ஓட்டங்கள் வித்தியாச வெற்றியாக இருந்தாலும் அது இங்கிலாந்துக்கு அனுகூலமாகவே அமையும்.

எனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஈட்டிய வெற்றயைத் தொடர்ந்து தனது வெற்றிகள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து முயற்சிக்கும்.

மறுபுறத்தில் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்பாராதவிதமாக வெற்றிகொண்டதன் மூலம் புதிய நம்பிக்கையுடன் சுப்பர் 12 சுற்றில் நுழைந்த அயர்லாந்து, ஆரம்பப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

இந் நிலையில் பலம்வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து சாதிக்கும் என கருத முடியாது.

ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகள் விசித்திரமானவை என்பதால் தலைகீழ் முடிவு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அணிகள்

England vs Ireland Live Score T20 World Cup 2022 Live Streaming, Live  Telecast- ENG vs IRE Live Score: ICC T20 World Cup 2022

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹெரி ப்றூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன்,  சாம் கரன், கிறிஸ் வோக்ஸ்,  மார்க் வூட், ஆதில் ராஷித். 

ENG vs IRE Match Preview, ICC T20 World Cup 2022, Match 20

அயர்லாந்து: போல் ஸ்டேர்லிங், அண்ட்றூ பெல்பேர்னி (தலைவர்), லோர்க்கன் டக்கர், ஹெரி டெக்டர், ஜோர்ஜ் டொக்ரெல், கேர்ட்டிஸ் கெம்ஃபர், கெரத் டிலேனி, மார்க் அடயார், ஃபியொன் ஹாண்ட், பெறி மெக்கார்த்தி, ஜொஷ் லிட்ல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20