தடுப்புக்காவலிலுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 09:16 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவுடன் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கடும் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு குறித்த தேரர் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கடுமையான காய்ச்சல் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேசிய வைத்தியசாலையின் 49 ஆவது சிகிச்சை அறையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக  தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

நாட்டில் ஜனாதிபதி பதவி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களாக விளங்கிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய மூவரையும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் விசாரணையின் இடையே ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க 50 நாள் தடுப்புக் காவலின் பின்னர் சான்றுகள் எனக் கூறி விடுவிக்கப்பட்டார்.

 எனினும் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் 65 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் சிறிதம்ம தேரருக்கு, கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள போதும்,  அவருக்கு சிகிச்சையளிக்காது விசாரணையாளர்கள் புறக்கணிப்பதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையிலேயே நேற்று  சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என  சி.ஐ.டி.  எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று இந்த விவகாரத்தில்  விசாரணைகளை முன்னெடுக்கிறது.

இந்த விசாரணையும், கைது மற்றும் தடுப்புக் காவலும் அடக்குமுறையின் உச்ச கட்டம் என ஆர்ப்பாட்டக்காரர்கள்  சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான பின்னணியிலேயே,  தடுப்பில் இருந்த போது சுகயீனமடைந்த சிறிதம்ம தேரர் வைத்தியசாலிஅயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47