“எமது நிலம் எமக்கு வேண்டும்” - வெள்ளாங்குளத்தில் மக்கள் போராட்டம்

Published By: Vishnu

25 Oct, 2022 | 08:38 PM
image

(மன்னார் நிருபர்)

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (25)   செவ்வாய்க்கிழமை காலை 10.30  மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.

 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

 குறித்த 100 நாள் செயல் முனைவின் 86 ஆம் நாள் போராட்டத்தில்  வெள்ளாங்குளம் கிராமத்தில்     உள்ள  பெண்கள், ஆண்கள், இளைஞர்கள்,  மற்றும் சிவில்  அமைப்பு  பிரதிநிதிகள்  என  பலர்  கலந்து  கொண்டதோடு,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது   பல்வேறு வசனங்கள்  எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வெள்ளாங்குளம் பகுதியில் ஊர்வலத்தை முன்னெடுத்த மக்கள் ,பின்னர் பிரதான வீதிக்கு அருகில் நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

'வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' ' நாங்கள் நாட்டை துண்டாட வோ'  தனியரசு கேட்கவில்லை.இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம்'

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்' '13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

 பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சை படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47