இரட்டை பிரஜா உரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் சபாநாயகருக்கு கடிதம்

Published By: Vishnu

25 Oct, 2022 | 08:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இரட்டை பிரஜா உரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவித்து பலரது பெயர்கள் சமூக வலைத்தலங்களில் உலாவருகின்றன.

உண்மையில் அவர்கள் இரட்டை பிரஜா உரிமை அற்றவர்களாக இருந்தால், அதன் மூலம்  அவர்களுக்கு பாரியதொரு பாதிப்பு ஏற்படுகிறது.

அதனால் இரட்டை பிரஜா உரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கமானால் அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாள ரோஹண ஹெட்டி ஆரச்சி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.,

அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரட்டை பிரஜா உரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மீண்டும் சமூக மட்டத்தில் கதைக்கப்பட்டடு வருகின்றது.

இரட்டைப் பிரஜா உரிமை உள்ள சிலர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் மற்றும் 21ஆம் திருத்தத்திற்கு அமைய இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

அதேபோன்று நாட்டில் சட்டக்கொள்கை அமைக்கும் மற்றும் நிதி நிர்வகிக்கப்படும் பாராளுமன்றத்துக்கள் வெளிநாட்டு பிரஜைகள் இருப்பது, இருப்பதாக அறிவிப்பது, அதன் கட்டமைப்பு தொடர்பில் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போவதற்கு காரணமாகலாம்.

அவ்வாறான நிலைமையில் இரட்டை பிரஜா உரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்த இரண்டு நாடுகளுக்கிடையில் தீர்மானமிக்க கொள்கை ரீதியிலான விடயமொன்றின்போது அல்லது ஒப்பந்தம் ஒன்றின்போது அவர் எந்த நாட்டுக்காக முன்னிட்பார் என்று கணிக்க முடியாதுள்ளது.

அத்துடன் இரட்டை பிரஜா உரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவித்து பலரது பெயர்கள் சமூக வலைத்தலங்களில் உலாவருவதுடன் உண்மையில் அவர்கள் இரட்டை பிரஜா உரிமை அற்றவர்களாக இருந்தால், அதனால்  அவர்களுக்கு பாரியதொரு பாதிப்பு ஏற்படுகிறது.

அத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டு மூலம் பாராளுமன்றத்துக்கும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாகவும் மக்களின் நம்பிக்கை இல்லாமல்போவது நல்ல விடயமல்ல.

அதனால் இதுதொடர்பாக விரைவாக தேடிப்பார்த்து, பாராளுமன்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய  அதிருப்தியை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறு இரட்டை பிரஜா உரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கமானால் அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதுதொடர்பாக நாங்கள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டளரிடமும் விசாரித்தோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு தெரிவிக்கின்றோம். எனவே இந்த விடயம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக எங்களை அறிவுறுத்துமாக இருந்தால் அதற்கு நன்றி உடையவர்களாக இருப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07