சக்திப்பீடங்களில், ஐஸ்வரியங்களை அள்ளி அருளும் அம்மன் தெய்வத்திற்கான மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதாரகெளரி காப்பு உற்சவத்தினை முன்னிட்டு, இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களிலும் விஷேட அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் யாழ். நல்லூர் ஸ்ரீ முத்து மாரி அம்மன் தேவஸ்தானத்தின் கேதாரகௌரி காப்பு விரதம் உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இக் கேதாரகௌரிகாப்பு விரதம் உற்சவம் கடந்த 05.10 அன்று ஆரம்பமாகி 21 நாட்களாக சிறப்புவழிபாட்டு பூஜைகள் (25.10) இன்று இனிதே கேதாரகௌரிகாப்பு கட்டும் விரதம் இனிதே நிறைவடைந்து. இவ் விரத உற்சவகிரியைகளை ஆலய பிரதம குரு வ.வைத்திஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
அர்த்தநாதஸ்வராக சிவபெருமானும்,உமாதேவியாரும், கையிலாச வாகனத்தில் வீற்றும்,முத்துமாரியம்மன் சிம்மவாகனத்திலும் வீற்று உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கேதாரகௌரிகாப்பு விரதம் உற்சவத்தில் பல இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றதுடன் புனித நோன்புகாப்பினை பெற்றுச்சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM