(எம்.எப்.எம்.பஸீர்)
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கி, சி.ஐ.டி.க்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர் திப்பட்டுவெவவின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல உள்ளிட்ட குழுவினர் மத்திய வங்கியின் சிறப்புக் குழுவிடம் இது குறித்த ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கியிம் பிரத்தியேக விசாரணைகளின் முன்னெடுத்துள்ள நிலையிலேயே, இந்த ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி, மோசடி செய்யப்ப்ட்டுள்ளதாக கருதபப்டும் பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
இதில், சந்தேக நபரான திலினி பிரியமாலி, வேறு நபர்களின் பெயர்கலில் ஏதேனும் வங்கிக் கணக்குகளை பேணினானாரா என்பது குறித்தும் சி.ஐ.டி.யின் அவதானம் திரும்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM