பல இ.போ.ச. பஸ்கள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Published By: Digital Desk 5

25 Oct, 2022 | 04:56 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ் வண்டிகள் உள்ளிட்ட பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக  பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டவந்த 5 பாடசாலை பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச் சொந்தமான பஸ் வண்டிகளும் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கொடக்கவெல டிப்போவுக்கு சொந்தமான குறித்த 5 பஸ் வண்டிகளுக்கு தேவையான என்ஜின் உதிரிப்பாகங்கள், கியர் பொக்ஸ்களின் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும், சில பஸ் வண்டிகளுக்கு குறித்த உதிரிப்பாகங்கள் பொறுத்தப்பட்டு திருத்தப் பணிகள் மேற்கொண்ட வருவதாகவும்  அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பஸ் வண்டிகளின் டயர், டியூப், பெட்டரி ஆகியவற்றை கொண்டு வந்து பாவனையிலிருந்து அப்புறுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் வண்டிகளை  சேவையில் ஈடுபடுத்துவதற்கான திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை...

2024-04-14 12:51:19
news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24