அமெரிக்காவில் பொறியியலாளராக கடமையாற்றியவர் குப்பைக் குழியிலிருந்து சடலமாக மீட்பு

Published By: Vishnu

25 Oct, 2022 | 03:17 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அமெரிக்காவில் பொறியியலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி மெல்சிறிபுர பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். 

இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள குப்பை குழியில் சடலமாக 24 ஆம் திகதி  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி மெல்சிறிபுர பிரதேசத்தில் 15 ஆம் கட்டை, ரெஸ்வத்த பிரதேசத்தில் அமெரிக்காவில் பொறியியலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பல நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரின் உறவினர்களால் மெல்சிறிபுர  பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

குறித்த அதிகாரி கடந்த  2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  பொறியியலாளராக தொழில் புரிந்து ஓய்வு பெற்று நாட்டிற்கு மீளவும் வருகை தந்துள்ளதுடன் அவருக்கு சொந்தமான மெல்சிறிபுர வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும் வீட்டு வேலைக்கு கடந்த 3  மாதங்களாக 43 வயதுடைய நபர் ஒருவர் சேவையாற்றி வந்துள்ளார். 

இதன்போது உதவியாளரிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளின் போது அதிகாரி கடந்த முதலாம் திகதி அநுராதபுரத்திற்கு சுற்றுலா ஒன்றிற்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இருப்பினும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற மேலதிக  தகவலுக்கு அமைவாக அதிகாரியின் வீட்டில் கடமையாற்றி வந்த குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி குறித்த நபர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் நேற்று அதிகாரியின்  வீட்டை சுற்றியுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது வீட்டின் பின்புறத்தில் உள்ள குப்பை குழியில் இருந்து குறித்த அதிகாரி ஆயுதத்தால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர் 69 வயதுடைய ஒருவர் எனவும் அவர் மெல்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27