உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Vishnu

25 Oct, 2022 | 12:49 PM
image

நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கலகத் தலைவன்'. இதில் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி அகர்வால் நடித்திருக்கிறார்.

தில்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கரொலி இசை அமைத்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார்.

பட பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,  தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டீசரில் சட்டவிரோத கும்பலை தனி ஒரு ஆளாக போராடி கண்டறியும் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார் என்பதால், இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டீசரில் உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' நவம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38
news-image

ஜோதிகா நடிக்கும் 'காதல் - தி...

2023-03-23 12:27:21
news-image

பிரம்மாண்டமான பான் இந்திய படங்களை தயாரிக்கும்...

2023-03-23 11:33:28
news-image

'கே.டி. தி டெவில்' படத்தில் இணையும்...

2023-03-23 11:14:03
news-image

'பொன்னியின் செல்வன் - 2'இல் நடிக்கும்...

2023-03-23 10:36:46
news-image

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர்...

2023-03-22 17:17:28