இலை அடை 

Published By: Digital Desk 7

25 Oct, 2022 | 10:08 AM
image

தேவையான பொருட்கள் 

ராகி மா - 400 கிராம்

துருவிய வெல்லம் (அ) கருப்பட்டி (அ) சிவப்பு சீனி - 100 கிராம் 

தேங்காய்த் துருவல் - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

Kanda இலை அல்லது நறுக்கிய வாழையிலைத் துண்டுகள் - 20 முதல் 25

 

செய்முறை 

ஒரு பௌலில் ராகி மாவுடன் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மா பதத்துக்கு பிசையவும்.

பிசைந்த மாவை பெரிய எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை வாழையிலையில் மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, இலையுடன் சேர்த்து இரண்டாக மடிக்கவும்.

பிறகு அவற்றை நீராவியில் 10 - 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான (இலை அடை) ஹெலப்ப தயார்.

வாழையிலைக்கு பதிலாக ஃபொயில் பேப்பர் (அ) பேக்கிங் ஷீட் பயன்படுத்தலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப வெல்லத்தைக் கூடுதலாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்