நமது சமையலறையில் இருக்கும் எல்லா பொருட்களுமே ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு நன்மைகளே செய்கின்றன. அவ்வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது க்ரீன் டீ.
க்ரீன் டீயில் அதிக அன்டி ஒக்ஸிடென்ட் உள்ளது, அது உடலுக்கு நன்மை தருகிறது என சொல்லியும் கேட்டும் சலித்திருப்பீர்கள்.
இருந்தாலும், உடலுக்கு எது நல்லதோ, அதனை பார்த்துப் பார்த்து, அவற்றில் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று அறிவதுதானே மனித அறிவின் இயல்பு.
அப்படி க்ரீன் டீ கொண்டு முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என பார்ப்போம்.
க்ரீன் டீ கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஃபேஷியல் மாஸ்க் சருமத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய பக்டீரியாக்களை அழிக்கின்றது.
சில குறிப்பிட்ட பக்டீரியாக்களின் தொற்றுக்களால் சருமத்தில் கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகள் தோன்றும். அவற்றை முழுவதுமாக அழிக்கும் சக்தி கொண்டது க்ரீன் டீ. அத்தோடு இறந்த செல்களையும் அகற்றிவிடும். க்ரீன் டீ மாஸ்க் தயாரிக்க என்னென்ன தேவை என பார்க்கலாம்
தேவையானவை:
க்ரீன் டீ - 2 டீஸ்பூன்
சமையல் சோடா- 2 டீஸ்பூன்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
அரை கப் நீரில் 2 டீஸ்பூன் க்ரீன் டீத்தூளை கலந்து கொதிக்கவிடுங்கள். நன்றாக டீத்தூள் நீரில் இறங்கியதும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது க்ரீன் டீ சாயம் தயார். ஆறியதும், இந்த சாயத்தில் சமையல் சோடா, தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி வாரம் 3 முறை செய்தால் சுருக்கங்கள் மறைந்துவிடும். இளமையாக முகம் இருக்கும். அது மட்டுமின்றி, பளபளப்பான சருமம் கிடைக்கும். தொய்வடைந்த சருமம் இறுகி, பளிச்சென்று இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM