மாற்றத்தை காணலாம்!

Published By: Digital Desk 7

25 Oct, 2022 | 09:32 AM
image

கேள்வி: 

நான் 23 வயதுப் பெண். வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது மூக்கு தட்டையாகவும் பெரிதாகவும் உள்ளது. இதனால், பலர் என்னை கேலி செய்கிறார்கள். ப்ளாஸ்டிக் சேர்ஜரி மூலம் இதை சரி செய்ய எவ்வளவு செலவாகும்? பக்க விளைவுகள் ஏற்படுமா? எங்கு இந்த சிகிச்சையை செய்யலாம்?

பதில்: 

ஆட்டோக்களின் முதுகில் 'எல்லோரிடமும் அழகு ஒளிந்திருக்கிறது. ஆனால், எல்லோரும் அதை அடையாளம் காண்பதில்லை' என்றொரு புது மொழியைப் பார்த்திருப்பீர்கள். உங்களது அழகை அடையாளம் காணத் தெரியாதவர்கள் தாம் உங்களை கேலி செய்கிறார்கள். அதையிட்டு வருந்த வேண்டும்.

ப்ளாஸ்டிக் சேர்ஜரி செலவு மிகுந்தது தான். அதன் மூலம் பலன் பெற்றோர் பலர் இருப்பினும், பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டோரும் இருக்கவே செய்கின்றனர். எனவே, இதைச் செய்துகொள்வதாக இருந்தால் மிகுந்த அவதானத்துடன், சிறந்த மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.

அதற்கு முன், காலையும் மாலையும் அல்லது எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம், உங்கள் கைகளால் மூக்கின் இரு பக்கமும் சில தடவைகள் ஒரே சீராக அழுத்திவிடுங்கள். 

இதைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வந்தால், குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right