பரபரப்பான போட்டியில் நெதர்லாந்தை 9 ஓட்டங்களால் தோற்கடித்தது பங்களாதேஷ்

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 02:46 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் ஹோபார்ட். பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவித்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று  குழு 2  கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 9 ஓட்டங்களால் வெற்றியை ஈட்டியது

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தெநர்லாந்து கடைவரை போராடி தோல்வியைத் தழுவியது.

Colin Ackermann got his first fifty at a T20 World Cup, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

கொலின் அக்கர்மன் பெற்ற அரைச் சதமும் 11ஆம் இலக்க வீரர் போல் வென் மீக்கெரெனின் முயற்சியும் வீண்போயின.

நெதர்லாந்தின் முதல் இரண்டு விக்கெட்கள் தஸ்கின் அஹ்மதின் முதலாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் வீழ்த்தப்பட அவ்வணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

தஸ்கின் அஹ்மத் வீசிய 4ஆவது ஓவரில் மேலும் 2 விக்கெட்கள் சரிய மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

Taskin Ahmed tries to get an LBW decision going his way, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து மிக மேதுவாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது. அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்துக்கொண்டிருக்க கொலின் அல்டர்மன் பொறுமையுடனும் அதேவேளை அவ்வப்போது அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி நெதர்லாந்துக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.

இந்திய வீரர் கோஹ்லி போன்று அக்கர்மன் அதிசயம் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரிடம் கோஹ்லி போன்று வீராவேசம் இருக்கவில்லை. அவர் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டமிழக்க (101 - 9 விக்.) நெதர்லாந்தின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு தகர்ந்துபோனது.

11ஆம் இலக்க வீரர் போல் வென் மீக்கெரென் 14 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 1 சிக்ஸுடன் 24 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் பங்களாதேஷின் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை.

கடைசி விக்கெட்டில் ப்ரெட் க்ளாசெனுடன் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த மீக்கெரென் கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய தஸ்கின் அஹ்மத் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

Nurul Hasan swoops in to break the stumps and run Tom Cooper out for a diamond duck, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, சௌம்யா சர்க்கார் ஆகிய இருவரும் 5.1 ஓவர்களில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க முதல் 5 விக்கெட்கள் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 25 ஓட்டங்களையும் சௌம்யா சர்க்கார் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

லிட்டன் தாஸ் (9), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (7), யாசிர் அலி (3) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

Afif Hossain added impetus to Bangladesh's innings, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

எனினும் அபிப் ஹொசெயன், நூருல் ஹசன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 120 ஓட்டங்களாக உயர்த்தினர்.

நூருள் ஹசன் 13 ஓட்டங்களையும் அபிப் ஹொசெய்ன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாசிர் அலி (3), தஸ்கின் அஹ்மத் (0) ஆகிய இருவரும் வந்தவேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.

Two in two: Taskin Ahmed sent back two Dutch batters off the first two balls of the chase, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

மொசாடெக் ஹொசெய்ன் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஒட்டங்களைப் பெற்று பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையை 144 ஓட்டங்களாக உயர்த்தினார்.

நெதர்லாந்து பந்துவீச்சில் போல் வென் மீக்கெரென் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41