நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 02:47 PM
image

(க.கிஷாந்தன்)

களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது.

இந்த தானியங்கி வான் கதவுகள் வழியாக இன்று (24) காலை முதல் நீர் வெளியேறி வருகின்றது.

இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என்பதல் காசல்ரீ நீர்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர் தேக்கத்தின் கடமை நேர பொறியலாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த பிரதேசத்திற்கு மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அதிகளவான் நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை 8 மணிக்கு மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனால் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மவுஸ்ஸாக்கலை, கெனியோன், லக்ஷபான பொல்பிட்டிய, நவலக்ஷபான, விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58