370வது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு முதலீட்டு சூழலுக்கான கேந்திர நிலையமாக ஜம்மு – காஷ்மீர் உருவாகி வருவதுடன், ஆயிரக்கணக்கான வளரும் தொழில்முனைவோர் தங்கள் சொந்த வர்த்தகங்களை முன்மாதிரியாக முன்னெடுத்து வருவதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜம்மு-காஷ்மீர் - ஸ்ரீநகர் ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் சுமார் ரூ.60,000 கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, இது ஜம்மு-காஷ்மீருக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசாங்கத்தின் வெற்றிகரமான பிரச்சாரத்தை பிரதிபலிக்கிறது என்று திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
தொழில்முனைவோரின் போராட்டத்தின் நாட்கள் முடிந்துவிட்டன. தங்கள் சொந்த முயற்சிகளை நிறுவ விரும்பும் இளைஞர்கள் பல்வேறு திட்டங்களின் மூலம் அரசாங்கத்தால் உட்சாகப்படுத்தப்படுவதுடன் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவிகளையும் வழங்குகிறது.
புதிய தொழிற்பேட்டைகள் வரவுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 3,300 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் குத்தகைப் பத்திரங்கள் 260 விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 111 தொழிற்பேட்டைகளில், 9,869 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஜம்மு காஷ்மீர் தனியார் முதலீடுகளை ரூ.14,000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. இருப்பினும், புதிய தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட ஆர்வத்தை அறிமுகப்படுத்திய பின்னர், ஒரு வருடத்தில் ரூ.56,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களைப் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நாடு வெளிநாடுகளில் இருந்தும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு போட்டியாக இருப்பதால், பல மன்றங்கள் மற்றும் தொழில்துறை உச்சிமாநாடுகளின் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை சென்றடைவதால், நாட்டின் சிறந்த முதலீட்டு இடமாக மாற உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM