logo

விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

Published By: Nanthini

24 Oct, 2022 | 12:19 PM
image

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த டைட்டிலுக்கான பிரத்தியேக காணொளியும் வெளியாகியிருக்கிறது.

'தங்கலான்' படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

ஏ. கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

கோலார் தங்க வயலை கதைக்கள பின்னணியாகக் கொண்டு, அக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு நிறைந்ததாக எடுக்கப்படும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். 

இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

'தங்கலான்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பிரத்தியேக காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதிலும் விக்ரம் மேலாடை அணியாமல் அந்த காலத்தைய சிகையலங்காரத்துடனும், கட்டுடலுடன் தோன்றுவது விக்ரம் ரசிகர்களுக்கு  உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் தங்கலான் என்றால் ஊரை காவல் காக்கும் தலைவர் என்ற பொருள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்'...

2023-06-08 15:56:59
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி...

2023-06-08 15:23:39
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின்...

2023-06-08 15:17:13
news-image

'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2023-06-07 21:33:24
news-image

கிஷோர் நடித்திருக்கும் 'முகை' படத்தின் முன்னோட்டம்...

2023-06-07 21:32:40
news-image

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக...

2023-06-07 21:28:34
news-image

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் புதிய...

2023-06-07 21:28:14
news-image

சாதனை படைக்கும் விஜய்

2023-06-07 20:31:54
news-image

மாதவன் - கங்கனா இணையும் தமிழ்...

2023-06-07 20:31:25
news-image

'தருணம்' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

2023-06-06 16:54:37
news-image

எஸ். ஜே. சூர்யா வின் 'பொம்மை'...

2023-06-06 12:46:27
news-image

கார்த்தியுடன் கரம் கோர்க்கும் அரவிந்த்சாமி

2023-06-06 12:46:53