நாடளாவிய ரீதியில் இன்றையதினம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இம்முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
நீர்கொழும்பில் விசேட பூசைகள்
நீர்கொழும்பில் இந்து மக்கள் தீபாவளி தினத்தை இன்று (ஒக் 24) அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.
நீர்கொழும்பு நகரில் உள்ள கோவில்களில் காலை வேளையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
இதேவேளை கடற்கரை தெரு சித்தி விநாயகர் ஆலயத்தில் கிருபாகர சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் விசேட பூஜையொன்றும் நடைபெற்றது. இதில் அதிகளவு பக்தர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை
தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (ஒக் 24) நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
(படங்கள்: ஐ. சிவசாந்தன்)
யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால், தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை காணப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் முற்பகல் முதல் கடும் மழை பெய்வதால், தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்தன.
அத்துடன் பெரும்பாலானவர்கள் ஆலய வழிபாடுகளுடன் தமது கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர்.
(படங்கள்: ஐ.சிவசாந்தன்)
வண்ணையம்பதி வரதராஜப் பெருமாள் ஆலயம்
தீபாவளியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் விசேட ஆராதனைகள் காலை 6 மணிக்கு இடம்பெற்றன.
இந்த பூஜை வழிபாட்டினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணிதர குருக்கள் நடாத்தி வைத்தார்.
இதன்போது பக்தர்கள் தம் உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி தீபவொளி என்னும் திருவிளக்கேற்றி வழிபட்டுச் சென்றனர்.
ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
(க.கிஷாந்தன்)
ஹட்டனில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஸ்ரீ பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
இவ்வழிபாட்டில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை புத்தாடைகள் அணிந்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்
(சேனையூர் நிருபர்)
திருகோணமலையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும், ஏனைய ஆலயங்களிலும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (24) விசேட கிரியைகள், பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM