லோகன் பரமசாமி
தற்போதைய உலகை தொழில்நுட்ப வளர்ச்சி பாரிய அளவில் ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக இலத்திரனியல் உபகரணங்களின் பாவனை பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்து விட்டது. இந்நிலையில் எந்தவொரு இயந்திரக்கருவிக்கும் தேவையான இலத்திரனியல் உதிரிப்பாகங்களின் உற்பத்திக்கு தாழ் மின்கடத்திகள் (செமிகண்ராக்டர்கள்) மிக முக்கியமானவையாகும்.
பலதசாப்தங்களாக தொடரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதியுச்ச நவீன இலத்திரனியல் உபகரணங்களின் வருகை அதிகரித்துள்ளதோடு அதற்கான சந்தைப்படுத்தலும் உயர்வடைந்துள்ளது. இதனால் தாழ்மின்கடத்திகளின் தேவையையும் அதன் உற்பத்தியையும் மிக முக்கியமான தொன்றாகிவிட்டது.
இதனைச் சரியாக புரிந்து கொள்வதானால் ஒரேயொரு சாதாரண கைத்தொலைபேசி உபகரணத்திலேயே பல நூற்றுக்கணக்கான வேறுபட்ட அலகுகளில் இலத்திரன்களை கடத்த கூடிய தாழ்மின்கடத்திகள் உபயோகப் படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இத்தாழ்மின்கடத்திகளை மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கக்கூடிய வல்லமை உலகிலேயே கைவிரல்களால் எண்ணிவிடக் கூடிய ஒருசில நிறுவனங்களிடமே உள்ளது. இந்நிறுவனங்களின் முதலீடுகள் தென்கொரியா தாய்வான் போன்ற நாடுகளிடமே உள்ளன.
உலக நுகர்வோருக்கே இலத்திரனியல் உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சீனாவுக்கும் அதன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்தத் தாழ்மின்கடத்திகள் மனித வாழ்வுக்கு ஒட்சிசன் அவசியமானதைப் போன்று மிகவும் முக்கியமானவையாகும்.
சில இலத்திரனியல் உபகரணங்களுக்கான தாழ்மின்கடத்திகளை சீனாவிலேயே உற்பத்தி செய்துவிடக்கூடிய தன்மை இருந்தாலும் உயர் தொழில்நுட்பப் பொருட்களை தயாரிக்கும் குவாவி போன்ற நிறுவனங்கள் மேலைதேய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாழ்மின்கடத்திகளையே அதிகம் வேண்டி நிற்கின்றன.
இவ்விடத்தில் தான் அமெரிக்க, சீனப் போட்டியும் அதனால் எழுந்துள்ள பூகோள அரசியலும் செல்வாக்குச் செலுத்துவதால் தாழ்மின்கடத்திகள் உற்பத்தியிலும் வியாபாரத்திலும் பெரும்பின்விளைவுகளைச் சந்திக்கின்றன.
அத்துடன் தாய்வான் மீதான அமெரிக்காவின் தலையீடு சீனப்படையெடுப்பை தூண்டுமானால் தாய்வானும் உக்ரேனின் தற்போதைய நிலைக்குத் தள்ளப்படும். மேலைநாடுகளின் உயர்தொழில்நுட்பத்துறை ஒவ்வொன்றிலும் அந்நிலைமை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உள்ளிணைபட்ட மின்சுற்றுகளை வடிவமைத்தல் பரிசோதித்தல் உற்பத்தி செய்தல் பொதிசெய்தல் போன்ற உற்பத்தித் தொழில்நுட்ப செயல்முறைகளும் தற்போதைய உலகில் ‘ஸ்மாட்போன்’ கைத்தொலைபேசிகளும் மிகச்சிக்கல் மிகுந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கிச் செயற்படுகின்றன.
கணணியின் கண்டுபிடிப்பும் அதுசார்ந்த வலையமைப்புக்களின் உருவாக்கமும் தொடங்கிய காலத்திலிருந்தே தாழ்மின்கடத்திகளின் உற்பத்தி தொடர்பிலான கடுமையான போட்டியிலேயே தொழிற்றுறை வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் மிகத்தனித்துவமான பூகோள உற்பத்தித் தொழில்துறையாகவும் மாறிவிட்டது. இந்த வளர்ச்சி பூகோள அரசியலில் தாக்கம் விளைவிக்கும் வகையில் தற்போது பரிணமித்துள்ளது.
தாழ்மின்கடத்திகளின் உற்பத்தியில் அதியுயர் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டுவரும் நிறுவனங்களில் தாய்வான் தாழ்மின்கடத்தி உற்பத்தி நிறுவனம், தென்கொரியாவின் நிறுவனம் அமெரிக்காவின் நிறுவனம், குளோபல் பொன்ட்ரைஸ் (ஜேர்மனி,அமெரிக்கா சிங்கப்பூர் என பல தேசங்களில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது ) எஸ்.ம்.ஐ.சி என்ற சீன நிறுவனம் என்று 13நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
நவீனமயப்படுத்தப்பட்ட தாழ்மின்கடத்திகளில் புதிய வடிவமைப்புக்களை உருவாக்கும் வல்லமை கொண்டவையாகவும் இவை காணப்படுவதோடு ஆய்வுகளையும் மேம்படுத்தப்பட்ட வடிவங்களையும் இவை முன்னெடுத்து வருகின்றன.
இத்தகையவை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இராணுவ உபகரணங்களுக்கும் மிக அடிப்படை தேவையுடைய பொருட்களாக மாறியுள்ளன. ரஷ்யா போன்ற நாடுகள் உயர்தொழில்நுட்ப வளர்ச்சியைக்கண்ட ஆயுதங்களை கைவசம் வைத்திராத நிலை இருப்பதாக மேலைத்தேய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சீனா தனது இராணுவ, கடற்படை உபகரணங்களில் அதியுயர்ந்த அளவில் தாழ்மின்கடத்திகளை கொண்டிருப்பதாக மேலைத்தேய ஆய்வுகள் கூறுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீன அரசு இத்தொழில் நுட்பவளர்ச்சியில் மிகக்கடுமையான நிதி முதலீடுகளைச் செய்து வருகிறது.
இத்துறையை தீவிர வளர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் சீனாவால் மானியங்கள் அளிக்கப்பட்ட ஆய்வுகளும், அபிவிருத்திகளும் அதன் விளைவாக உற்பத்திப் பெருக்கமும் பரவலாக விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.
மேலும் சீனா வழங்கும் இத்தகைய மானியங்கள் மூலம் பெரியளவிலான தாழ் மின்கடத்திகள் வளங்களை சங்கிலிகளாக உருவாக்கி ஆயுத உற்பத்தியிலும் அன்றாட இலத்திரன் பொருள்களின் உற்பத்தியிலும் சர்வதேச அளவில் முதன்மை நிலையை அடைந்துவிடவே சீனா மிகக் கடுமையாக முயற்சிக்கிறது.
அதேவேளை சீனாவின் இறக்குமதிகளில் அதியுயர் செலவீனமாக இருப்பது மசகு எண்ணெய்க்கானதாக உள்ளது. அதன் மொத்தச் செலவீனத்தில் 9.71 சதவீதம் இதற்காக பயன்படுத்தப்படுவதோடு அதற்கு அடுத்தபடியாக, இலத்திரனியல் தாழ்மின்கடத்திகள் 9.34 சதவீதமாகவும் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் தாழ்மின்கடத்திகளை சீனாபவுக்கு விற்பனை செய்வதில்லை அறிவித்துள்ளது. இந்தவிற்பனை அறிப்பானது, அமெரிக்காவினால் எவ்விதமான முன்னறிவுப்புமின்றி விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ‘செயற்கைஅறிவு’ தாங்கிய உபகரணங்களை உற்பத்தி செய்யக்கூடிய செயலிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்படவுள்ளது. அடுத்து உயர் தரத்திலாக தாழ்மின் கடத்திகளை உற்பத்தி செய்யும் இயந்திர உபகரணங்கள் கருவிகள் ஆகியவற்றை சீனாவுக்கு விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க ஏற்றுமதி பொருட்களில் தாழ்மின்கடத்திகளை கொள்வனவு செய்யும் சீனாவினுடைய கம்பனிகள் குறித்த புதிய பட்டியலும் தயாரிக்கப்படுகின்றது. அவற்றுக்கான விசேட அனுமதி பெற்றுக்கொண்ட பின்னரே கொள்முதல் செய்வதற்கு அனுமதித்தல் உள்ளிட்ட மூன்ற கட்டுபாடுகளை பைடன் நிர்வாகம் கொண்ட வந்தது.
இதற்கு காரணம் கடந்த மூன்று வருடங்களாக சீனா முழு அளவிலான தாழ் மின்கடத்திகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வந்துள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவையும் அதன் கிழக்கு ஆசிய கூட்டு நாடுகளையும் பூகோள ரீதியான முதன்மையை சவாலுக்குள்ளாக்கும் செயலாக இருக்கின்றது என்றே அமெரிக்கா கருதுகின்றது.
சீன உள்நாட்டு அறிஞர்களின் பார்வையில் மிகவிரைவில் இலத்திரனியல்துறை வியாபாரத்திலும் இராணுவ தயார் படுத்தல்களிலும் சுயஆற்றல் கொண்ட பலம்மிக்க தேசமாக சீனா உருவாகிவிடும் என்று கணித்துள்ளனர்.
அத்துடன் இந்த ஆற்றல் ஐக்கிய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய இரு பிராந்தியத்தையும் சவாலுக்கு உள்ளாக்கும் வலிமைகொண்ட நாடாக சீனா உருவாகி விடும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
இதுவே பைடன் நிர்வாகம் சீனாவுக்கெதிரான தடை நடவடிக்கைகளை எடுப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆக தாழ்மின் கடத்திகள் பூகோள அரசியலில் பெரும்செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் ஒன்றாகிவிட்டது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM