மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மாத்திரமே நிறைவேற்று அதிகாரம் உள்ளது - அனுரகுமார

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 11:46 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

ரணில் விக்ரமசிங்க மக்களால்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை.  அவர் தற்காலிகமாக பதவியில் நிறுத்தப்பட்ட ஒருவர். ஆனால் அரசியலமைப்பின் 40 சரத்தில் உள்ள இடைவெளியை பயன்படுத்தி ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் தற்போது தனக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக எண்ணி கொண்டுள்ளார்.

 இந்நிலையில் நாட்டின் அரசியலமைப்பின் படி நாட்டின் பாதுகாப்பு, நிறைவேற்று அதிகாரமும்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினாலேயே செயல்படுத்த வேண்டும் என்றும்  ரணில் விக்ரமசிங்கவிற்கு எதுவித அதிகாரங்களும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மொரவக்க  பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எமது நாட்டின் அரசியலமைப்பின் 4ஆம் சரத்தின் ஆ பிரிவின் படி மக்கள ஆணையின்றி அதனை மாற்ற முடியாது. நாட்டின் பாதுகாப்பு, நிறைவேற்று அதிகாரமும்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினாலேயே செயற்படுத்த வேண்டும்.

எந்த ஜனாதிபதி?  மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகும். ஆனால் ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு  செய்யப்பட்டாரா? அவர்  பாராளுமன்றத்திற்கு கூட தெரிவு செய்யப்படவில்லை.  தற்காலிகமாக பதவியில் நிறுத்தப்பட்ட ஒருவர். ஆனால் 40 சரத்தில் உள்ள இடைவெளியை பயன்படுத்தி ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் தற்போது தனக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக எண்ணி கொண்டுள்ளார்.

மேலும்  134 பெரும் முழுமையான திருடர்கள். 134 பேர் வாக்களித்தனர். ஜனாதிபதி இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஜனாதிபதி 6 மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது என்று நாம் திருத்தங்களை மேற்கொண்டோம்.

நல்லது அது மக்களுக்கு நல்லதாக அமைந்தாலும் அது பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல. அவர்கள் கட்சி மாறி அங்குமிங்கும் தாவினால் பாராளுமன்றத்தில் அவரின் உறுப்புரிமை இல்லாது செய்யப்படும் என்று திருத்தம் மேற்கொண்டோம். அது சிறந்ததா? இல்லையா?  நீங்கள் ஏற்று கொண்டு கைகளை தட்டி பயனில்லை அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை

மேலும் ரணில் விக்கிரமசிங்க நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு இருந்த  போது எவரும் பொறுப்புகளை பொறுப்பேற்க முடியாது என்ற போதே தாம் தைரியமாக பதவியை பொறுப்பேற்றதாக கூறுகிறார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி நாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தோம் அந்த கடிதத்தில் உங்களால் முடியாது என்றால் நாம் பதவிகளை பொறுப்பேற்க தயார் என்று கூறியிருந்தோம்

இருப்பினும் 13 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு தெரிவு செய்து ராஜபக்ஷக்களை பாதுகாக்கும்  கேடயமாக பயன்படுத்தி கொண்டார்கள்

மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது அலரி மாளிகையில் இருந்து தப்பிச் சென்று திருகோணமலையில் பதுங்கியிருந்து மஹிந்த ராஜபக்ஷ இன்று களுத்துறையில் மீண்டும் 'எக்வ நெகிடிமு' என்கிறார்.

இந்நிலையில் அடுத்த மக்கள் எழுச்சி போராட்டங்கள் வன்முறைகள் மூலம் உருவாவதை விடுத்து மக்களால் கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கம் உருவாகும் வரை  இவ்வாறான பயணங்களை  முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50