(லியோ நிரோஷ தர்ஷன்)

இராஜதந்திர சேவைகளுக்கு அப்பாற் சென்று அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிற்குள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்  அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.