(எம்.வை.எம்.சியாம்)
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை இரண்டரை வருடங்களுக்கு நீடித்தல், இரட்டைக் குடியுரிமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததது.
மேலும் பாராளுமன்றத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அரசாங்கத்திற்கு சவாலானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (23) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் சதஹம் யாத்திரை நிகழ்ச்சித்திட்டத்தை நாவலப்பிட்டியில் ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எதிர்கட்சி 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு பிரதான காரணம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை விட தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தம் ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.
மேலும் 22 ஆவது திருத்தத்தில் குறிப்பாக சில முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன அதில்
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை இரண்டரை வருடங்களுக்கு நீடித்தல் இரட்டைக் குடியுரிமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததது
மேலும் எதிர்க்கட்சியில் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பின் அவர்களை தொடர்ந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக இந்த நாட்டில் கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவது நாட்டின் கலாசாரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்குவதில் ஐக்கிய மக்கள் சக்திக்கு உடன்பாடு இல்லை.
பணம் சம்பாதிப்பதற்காகவும், அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM