நெருக்கடியான சூழ்நிலையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பிரார்த்தனை செய்வோம் - சஜித்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

Published By: Vishnu

23 Oct, 2022 | 08:29 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும். அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் இலங்கை மக்களிடையே  நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரின் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒளிமயமான நாட்டுக்காக தீபாவளியில் பிரார்த்திப்போம் 'வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும்' பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.இந்துக்கள் இத்தினத்தில் எண்ணெய் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து, ஆலய தரிசனம் செய்வதுடன், ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள்.

அத்துடன் பெரியோர்களை வணங்கி, பரிசுப் பொருட்கள், பரிமாறி பட்டாசு கொளுத்தி உறவினர்களுடன் இனிப்பான சிற்றுண்டிகள் உண்டு,  உலகெங்கும் உள்ள இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில் நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத் திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிறீபவானந்தராஜா எம்.பி...

2024-12-11 12:38:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-12-11 12:11:38
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட...

2024-12-11 11:56:43
news-image

புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு...

2024-12-11 11:42:37
news-image

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூதாட்டி...

2024-12-11 11:57:18
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06