வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக மாறும் - எச்சரிக்கிறது வளிமண்டலவியல் திணைக்களம் 

By Nanthini

23 Oct, 2022 | 08:32 PM
image

(எம்.எப்.எம். பஸீர்)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (ஒக் 24) நாளையும் (ஒக் 25) கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்விரு நாட்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக  திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாதிலக தெரிவித்தார்.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை விட நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என எச்சரிக்கும் காலநிலை அவதான நிலையம், அந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்பதுடன்  நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படலாம் என  தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன், அக்கடல் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ  இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவித்த  வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி ஸ்ரீஇமால் ஹேரத் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இதற்கு முன்னர்   வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்த நிலையிலேயே, 25ஆம் திகதி வரை அப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை அண்மித்து உருவாகியுள்ள தாழமுக்க வலயம் எதிர்வரும் 22ஆம் திகதி மேல் மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்க நிலையானது நாளை திங்கட்கிழமை 24ஆம் திகதி சூறாவளியாக வலுவடையக்கூடும் என குறிப்பிடும் திணைக்களம், அதன் பின்னர் சூறாவளியானது வடக்கு மற்றும் வடமேல் திசை நோக்கி  பயணித்து, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி மேல் வங்காள கடற்பிராந்தியத்தை அடையும் என தெரிவித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33