துருவா சர்ஜாவின் 'கேடி - தி டெவில்': விஜய் சேதுபதி குரலில் வெளியான பட டீசர்

Published By: Nanthini

23 Oct, 2022 | 03:44 PM
image

ன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான துருவா சர்ஜா கதாநாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கேடி - தி டெவில்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குநரான பிரேம் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கேடி - தி  டெவில்'. வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அர்ஜுன் ஜென்யா இசையமைக்கிறார். 

அக்ஷன், என்டர்டெய்ன்மென்ட் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.வி.என்., பிரம்மாண்டமான பொருட்செலவில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் டைட்டிலுக்காக பிரத்தியேக காணொளியொன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதற்காக பெங்களூரில் உள்ள ஒரியன் வணிக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''எங்கு நல்லவை இருக்கிறதோ, அங்கே கெட்டவையும் இருக்கும். உதாரணத்துக்கு ராமன் இருந்த காலகட்டத்தில் தான் இராவணனும் இருந்தான். 'கேடி' இரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. கேஜிஎப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில் 'கேடி' உருவாகி இருக்கிறது'' என்றார்.

படத்துக்காக வெளியிடப்பட்ட பிரத்தியேக காணொளியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் தமிழ்ப் பதிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

'கேடி - தி டெவில்' படத்தின் டைட்டிலுக்கான டீசரில், சிறையிலிருந்து 'காளி' எனும் கதாபாத்திரம் விடுதலையாவதும், அவர் குறித்து மக்கள், எதிரிகள், காவல்துறையினரிடையே கிடைக்கப்‍பெறும் வரவேற்பு குறித்தும், விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதனிடையே கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகம்', 'சார்லி 777', 'விக்ராந்த் ரோணா' மற்றும் 'காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக பாரிய வெற்றி பெற்றிருப்பதால், மீண்டும் அதேபோன்றொரு வெற்றியை 'கேடி - தி டெவில்' படம் பெற்றுவிடும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்