ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக தாம் எடுத்த தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறது -ஹரின்

Published By: Vishnu

23 Oct, 2022 | 03:43 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தாம் எடுத்த தீர்மானம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மக்கள் முன்னிலையில் பேசுவதை தவிர வேறெதுவும் செய்யாத கோமாளிகளால் மக்களை மகிழ்வித்தாலும் அவர்கள் கனவு காணும் அதிகாரத்தை மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு வழங்க மாட்டார்கள் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனது தாய்நாடு பொருளாதார சமூக, மற்றும் அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலையில் இருந்த வேளையில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க நான் எடுத்த தீர்மானத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சவால்களுக்கு எதிராக எங்கள் மனசாட்சியின் படி சரியான முடிவுகளை எடுக்கும் போது இயற்கை கூட எங்களுக்கு  உதவும் மற்றும் கடவுளும் ஆசீர்வதிப்பார் என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த 3 மாதங்களில் மக்களுக்காக என்னால் முடிந்த பங்களிப்பை வழங்க முடிந்தததையிட்டும் நெருக்கடிகளுக்கு சிக்கியிருந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் பொறுப்பேற்காத நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் இன்று நாம் பெருமைப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. வரிசைகளின் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைததிருக்கிறோம், விவசாயத்திற்கு உரம் விநியோகம் செய்ய ஆரம்பித்தோம், விண்ணைத்தொடும் பொருட்களின் விலையை எங்களால் கட்டுப்படுத்தி சிறிதளவு குறைக்க முடிந்தது, உலகெங்கிலும் உள்ள நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை திரும்ப பெற எங்களால் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்தது.

நண்பர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு என்னால் பங்களிக்க முடிந்தது. 22 ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை மீண்டும் தொடங்க முடிந்துள்ளது. 

எனது அரசியல் வாழ்க்கை தொடர்பாக எதிர்காலத்தில் நான் என்ன முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு நான் என்னை அர்ப்பணிப்பேன்.

பேசுவதை தவிர வேறெதுவும் செய்யாத கோமாளிகளால் மக்களை மகிழ்வித்தாலும் அவர்கள் கனவு காணும் அதிகாரத்தை மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு வழங்க மாட்டார்கள் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31